Skip to main content

Posts

Showing posts with the label Kavithai

அது ஒரு தனி உலகம், அவர்களுக்காக மட்டுமே!

  நகரத்துக் காலை நேரத்துப் பரபரப்பு அடங்கியதாலோ என்னவோ, நான் வார இறுதியில் பயணித்த பேருந்தின் ஓட்டுநர் மென்மையான பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தார். “மீனம்மா” பாடலின் “அம்மம்மா… முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே…” என்ற வரிகள் ஒலித்தபோது மெதுவாகத் தூக்கிப் போட்டது — பேருந்தல்ல! அது ஆண் குரலுக்கான வார்த்தைகளாய் தோன்றினாலும், பெண் குரலில் ஒலித்த அந்த வரிகளின் கற்பனை மிகுதி ஏதோ சிந்திக்கச் செய்தது. பார்வையில் உரையாடிக் கொள்ள முடியும்தான், ஆனால் அதைக் காவியமாக்கிக் கொண்ட கற்பனைத்தான் சற்று வியப்படைய வைத்தது. வண்ணங்களைப் பூசிக் கொண்டு அழகு கொள்ளும் வெண்ணிற ஆடைபோல, கற்பனைகளைத் தரித்துக் கொள்வதில்தானே கவிதைகளே பிறக்கின்றன, அதுவும் காதல் கவிதைகளுக்குச் சொல்லவா வேண்டும்! பொதுவாகக் கற்பனைகளில் பல உண்மையாகுவதை நாம் பார்த்திருக்கிறோம், அறிவியலின் படைப்புகள் பெரும்பாலும் இப்படித்தானே. சட்டென்று ஒரு ஐயம் — காதல் கவிதைகள் எல்லாம் இதற்கு எதிர்மறையாக இருக்குமோ — அதாவது உண்மைகளைத்தான் கற்பனை என்று எழுதிக் கொண்டிருக்கிறார்களோ என்று. வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, த...

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம்…

எலிமென்டரி ஸ்கூல் படிக்கிற வயசில ஒரு சின்ன சாக்லெட்ட நமக்குத் தெரியாம ஒளிச்சி வச்சி தனியா சாப்பிட்டா, நம்ம ப்ரண்டு மேல ஒரு கோபம் வந்திருக்கும் (சிலருக்கு இப்போதும் கூட!). கண்டிப்பா அதையே பதிலுக்குச் செஞ்சி மனச தேத்திக்குவோம். மன்னிக்கத் தோணாத வயசு அது. கூட்டி கழிச்சி பார்த்தா, பெரும்பாலும் அதுதான் நட்பில் முதல் துரோகம். என்ன, அது அப்ப துரோகமாவும் தெரியாது, இப்ப அதெல்லாம் துரோகம்ன்னு ஒத்துக் கொள்ளவும் முடியாது.  எக்ஸாமுக்கு முந்தைய நைட்டுதான் நாலு பேரும் ஒரு ரெண்டு மணி நேரம் படிச்சிருப்பீங்க. அடுத்த நாள், மூனு பேரு அரை மணி நேரத்திலேயே எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தா, ஒருத்தர் மட்டும் ரெண்டு மணி நேரம் எழுதினா அது நட்புக்குச் செய்கிற மாபெரும் துரோகம் இல்லையா? இருந்தாலும் மதியம் படத்துக்கு நாலு பேரும்தான் போவீங்க. நாலு பேருக்கும் அரியர்ன்னு ரிசல்ட் வரும் போதுதான், துரோகத்தைப் பெருந்தன்மையோடு முழுமையா மன்னிக்கிறதில கிடைக்கிற மனநிறைவை புரிந்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு மனப்பக்குவமெல்லாம் ஆண்டவன் கொடுக்கிற வரம். ப்ரண்டோட ப்ரண்டோட… ப்ரண்ட அறிமுகம் மட்டும் படுத்தச் சொ...

வீரமனோகரி

குலசேகரன் பட்டினம் வீரமனோகரி அம்மனை தெரிந்தவர்களுக்கு மட்டும் இப்பதிவு. கவிதையென்றெல்லாம் ஆராய்ந்துக் கொண்டிருக்காதீர்கள்.   விஞ்ஞானமே அது மெய்ஞானமென   உன்னருட் பார்வை பாராதிருந்தேன்.   பொய்ஞானமது.   இன்றில்லை! இனியுமில்லை!   சிறியேன் மடமை நீக்கி உயிர்   சிந்தையில் நிறைந்திடு முழுமதியே.   அன்றந்த செந்தில் வேலனின்   வேண்டுதல் மொழி ஏற்றாய்.   குருதியேந்தினாய்.   விதியுமில்லை! மதியுமில்லை!   சினம் காத்து குணம் ஒளிர   கருணைக் கொள்வாய் தாயே.   சிற்றிலையாய் சிறுமேகமாய் அலைகின்றேன்   இப்பிறப்பின் பயனுற விருப்புற்றேன்.   திக்கற்றேன்.   தெளிவுமில்லை! வழியுமில்லை!   அடியேனை முன்னிறுத்தி உன் விருப்பில்   வழி நடத்தேன் என்னிறையவளே.   திங்கள் சில தீர்ந்தோடட்டும்   உந்தன் பொற்பாதம் பற்றுவேன்.   யாசிப்பேன்.   வழக்குமில்லை! மறுப்பதுவுமில்லை!   குலம் சிறக்க வரம் கேட்பேன்   எனை ஆட்கொண்டருள்வாய் குலமகளே. பி.கு: வீரமனோகரி என்ற பெண்ணை இன்னும் சில மாதங்களி...

மோகத்தை கொன்று விடு அல்லால்...

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே! - மனம் விரும்புதே உன்னை... உன்னை என திரையிசைக்காய் வைரமுத்து எழுதிய வரிகள் இவை. " காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்; மாணிழை கண்ணொவ்வேம் என்று " இது வள்ளுவரின் சில நூறு குறள்களில் ஒன்று. அன்றைய சங்கத் தமிழுக்கும் இல்லாமல் இன்றைய திரைவடிவுக்கும் இல்லாமல் வாழ்வியல் அறம் கூறியும், கொழுந்து விட்டுக் கொண்டிருந்த விடுதலை தீயினிடையிலும் பா வடித்தவர் பாரதியார். " கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" இது அவரது வீரம் தொனிக்கும் அச்சமில்லை பாடலின் வரிகள். எந்தக் கவிஞனுக்கும் இது அழகு என்பதால், காதல் சுவையில் பாரதியும் கவிதை எழுதியிருப்பது எனக்கொன்றும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மின்னல், வீசும் இளங்காற்று, மழை, மேகம், அந்திமாலை என எல்லாம் காதல் அரும்ப உகந்த காரணிகள் போலும்! பாரதியும் அப்படித்தான் துவங்குகிறார். " சந்திர னொளியில் அவளைக் கண்டேன்; சரண மென்று புகுந்து கொண்டேன்; இந்திரி யங்களை வென்று விட்டேன்; எனதெனாசையைக...

மழை

மழை என்ற தலைப்பில் ஒரு கவிதை சாரலாய் வீசிச் சென்ற   அவள் கார்கூந்தல் மணம்   மாலைகள் ஆயிரம் மறைந்தும்   மறையாமல் உயிருக்குள்.   மனம் மீண்டும் அதே சாரலுக்காய்!   எங்கோ இடித்தது   சிதைந்தது என் இனம்   கல்மழையாய் தாக்கி   தகர்த்தது என் இதயமதை.   பூமழைக்காய் இனியும் ஒரு புதுக்கனவு!   என் சிட்டின் மழலைச் சொல்   பனிமழையாய் குளிர்கிறது   உதடோடு பட்டுத் தெறிக்கும் உமிழ்நீரும்.   பனிமழையை தூவிட பரமனிடம்   ஒரு ஜனனவர வேள்வி!   வீரம் மறந்து வரலாறு தொலைத்து   புயல்மழையில் பூங்குயிலாய் வாழ்வில் வீழ்ந்து   என் இளைஞர்க் கூட்டம்.   இளந்தூறலாய் தூவி உயர்த்தவோர்   விதி செய்ய உள்ள ஏக்கம்!   விழி மூடி விண் நோக்கி   விழும் மழைத்துளியில்   முகம் புதைக்கும் ஒரு கணம்   உடலணுக்களெல்லாம் ஆனந்தக்   கூத்தாடும் நீர் மேல் மழையாய்!   Kovil Pillai P.

உன் கண்ணில் நீர் வழிந்தால்

எப்பொழுதாவது பழைய திரைப்பட பாடல்களை கேட்பதுண்டு, கேட்கும்போதெல்லாம் அதன் சுவைதனில் மூழ்காமல் இருப்பதில்லை, இருக்க முயன்று தோற்ற நாள்களும் உண்டு. பாடலின் இசை, படமாக்கிய விதம், நடிகர்களின் பாவங்கள் மற்றும் அழகிய தமிழ் சொற்களின் கலவை உண்மையாகவே கேட்போரை மெய்மறக்கச் செய்யும். இன்னும் ஒருமுறை இம்மாதிரியான பாடல்கள் தோன்றுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன் (எப்பொழுதுமே நல்ல பாடல்கள் வருகின்றன என்பதை மறுக்கவுமில்லை). உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம்: வியட்நாம் வீடு இசை: கே. வி. மகாதேவன், புகழேந்தி குரல்: டி.எம்.சௌந்தரராஜன் இயற்றியவர்: கவியரசர் கண்னதாசன் "என் தேவையை யாரறிவார்... உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்" - மிகச் சிறந்த பாடல் ஒன்றுக்கான அத்தனை பாங்கும் கொண்ட வரிகள்(ஒலி + ஒளி). திருமண உறவில் நீண்ட பயணம் கொண்ட எவரையும் உணர்ச்சிப்பூர்வமாக்கும் தன்னிகரில்லாத பாடல். உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி பொன்னை மணந்ததினால் உலகில் புகழும் வளர்ந்ததடி பேருக்கு பிள்ளை என்று பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என் தேவையை யாரறிவார் உன்னை போல் தெய்வம் ஒன்றே ...

பிடித்த திரைப்பட பாடல் (ஒரு) வரிகள்

பொதுவான சொற்கள்தாம், வழக்கமான இசையும் கூட, இருந்தாலும் சில பாடல் வரிகள் மிகவும் கவர்கின்றன. எனக்கு பிடித்தவைகள் சில இங்கு. சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு படம்: மக்களைப் பெற்ற மகராசி தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் வரும் இடம். படம்: மயக்கம் என்ன உனக்கென மட்டும் வாழும் இதயமடி படம்: மயக்கம் என்ன மரணங்கள் வந்தாலும் வரமல்லவா... படம்: தமிழ் எம்.ஏ. என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ படம்: 3 கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி படம்: தீபாவளி Kovil Pillai P.

சில திரையிசைப் காதல் பாடல்கள்

இந்த பதிவை எழுத நினைத்து சில வரிகளை யோசித்த போதே இது ஒரு நீண்ட பதிவு என உணர முடிந்தது. பொறுமையாக படித்து நேரத்தை வீணடிக்காமல், ஸ்காரால்பாரை இழுக்கின்ற வேகத்திலேயே கண்ணில் தெரிவதை படித்தாலே போதும். காதல் இல்லாத தமிழ் படங்கள் அரிது என்பதால் காதல் பாடல்களுக்கும் பஞ்சமே இல்லை. சமீபத்திய பாடல்களே நூற்றுக் கணக்கில் இருக்கும். ஒரு சில பாடல்களே இங்கு - சிறந்த பாடலென்றோ, எனக்கு பிடித்த பாடலென்றோவெல்லாம் எதுவும் இல்லை. சில விஷயங்களை சொல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுத்துக் கொண்டது, அவ்வளவுதான். நட்பும், காதலும் இதுதான் என்று வரையறுத்து கூற முடியாது, பண்புகளை பட்டியலிட்டு சரி பார்த்துக் கொள்ளக் கூடாதது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. இரண்டுமே கணப் பொழுதிலும் உணர்ந்துக் கொள்ளலாம், காலப் போக்கிலும் அறிந்துக் கொள்ளலாம். ஆனாலும் அடிப்படையில் ஒன்றுதான் - உடல், பொருளையெல்லாம் கடந்து நிற்கின்ற உணர்வுநிலை. எதிர்பாலாருடனான நட்போ, காதலோ தங்களுக்குள் பெரிதான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில்லை. நுழிலையான மெல்லிய வேறுபாடுகள்தான் - தனித்துக் காட்ட அதுவே போதுமானது. அதை உணர முடியாத போதுதான், நட்பா? கா...

ஒரு நாளில் வாழ்க்கை

Addicted to this song ;) ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால் ஓஓஓஓஓஓ … போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால் ஓஓஓஓஓஓ … அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு உன...

சந்தோஷம் சந்தோஷம் - Vijay song

Kovil Pillai P.

நட்பைக்கூட கற்பை போல …

தந்தையா? நண்பனா? என்றால் தந்தையென எளிதில் சொல்லிடலாம். தோழமையில் இதுவெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஒவ்வொரு விட்டு கொடுத்தலிலும் தனது மரணமின்மையை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் ஓர் உன்னத உறவு நட்பு. ஓடுகின்ற கால்கள், எழுதியாடும் விரல்கள், இசைக்கும் குரல்... எல்லாம் பெரியதுதான் - சுவாசமாய் நட்பு: இயல்பாய், எந்த ஒரு ஆர்பரிப்புமுமின்றி, ஆழமாய், உயிரோடு கலந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும். தாயாகத் தோழி, தோழியாக தாய் - குவளைக்குள் நீராய் எந்த உறவிலும் தன்னை உட்புகுத்தி வெளிக்காட்டும் இணையற்ற உணர்வு நட்பு. என் நினைவில் நின்ற/ தேடிப்பிடித்த நட்புக்கான சில திரைப்பட பாடல் வரிகள் இந்த பதிவில். என்னுடைய அம்மாவுக்கு பிடித்த பாட்டு. அம்மாவுக்கு பிடித்ததாலேயே நான் கேட்டு பழகிய பாடல். பத்தாவது படித்த போது கேட்ட பாடல். காதல், நட்பு இரண்டிலுமே யதார்தத்தை அறியாமலேயே ஆழத்தை அடைந்ததாய் ஓர் மயங்கிய நிலையில் மகிழ்ந்து திரிந்த காலம். உண்மையில் இதுதான் நட்பு, இதுதான் காதல் என்று இப்போது கூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் வரையறைகளுக்கு அப்பற்பட்டது இது இரண்டும் என உறுதியாக சொல்ல முடியும். படமாகவும் என்னை கவர...

Longing for the rain...

I don't know when, I don't know how? I just fell in love with him somehow. Oh my God! How did this happen? I don’t know what, in him, I see? Is it his sweetness that attracts? Or is it his smile that lures? Is it his words chocolaty? Or is it the lil things he does? Oh my God! please tell me how? How he does this, from so far? I have not known him much He hasn’t yet given me a touch One day I would find out how He stirs me with a gaze, And raises in me a storm Blows my in..... out like a ‘Katrina” I would know why my heart pounds In shudder causing a thunder, A strong rush of adrenalin And drums beat in my ears! A day, I would know why I felt the brush of his lips, with which he sets me quivering in ecstasy. But for now I'm on blaze, longing for the rain --- Sophie Kovil Pillai P.

கவியரசு கண்ணதாசன்: ஆசையே அலைபோலே

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை) பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை) வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா! காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை) சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை) Kovil Pillai P.

Broken Heart (Tamil)

src Kovil Pillai P.

காதல் கவிதை

நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்! src

Amma

அழகான சிறிய ஹைக்கூ கவிதை கேட்டார்கள் அம்மா என்றேன் கேட்பது அம்மாவாக இருந்திருந்தால் அதை விட சிறியதாக சொல்லிருப்பேன் நீ என்று. src

Ennavalin Paarvai

This post is not for you, if you can't understand Tamil without translation. I prefer to read Haiku sort of poems because they are * Short * Simple * Full of imagination * Worst case, tend to be a good joke I have read this poem (given below) recently. After reading the first four lines, I thought he is worried about the environment. After reading the next four lines, I felt, he is also concerned about the fellow people. And then he surprised my 'read ahead' mind with his next four lines, especially the last line because I was expecting something to show his 'social responsibility' but it was something else. What kind of person is he to have this kind of thought flow? Kovil Pillai P.