Skip to main content

Posts

Showing posts from August, 2013

மழை

மழை என்ற தலைப்பில் ஒரு கவிதை சாரலாய் வீசிச் சென்ற   அவள் கார்கூந்தல் மணம்   மாலைகள் ஆயிரம் மறைந்தும்   மறையாமல் உயிருக்குள்.   மனம் மீண்டும் அதே சாரலுக்காய்!   எங்கோ இடித்தது   சிதைந்தது என் இனம்   கல்மழையாய் தாக்கி   தகர்த்தது என் இதயமதை.   பூமழைக்காய் இனியும் ஒரு புதுக்கனவு!   என் சிட்டின் மழலைச் சொல்   பனிமழையாய் குளிர்கிறது   உதடோடு பட்டுத் தெறிக்கும் உமிழ்நீரும்.   பனிமழையை தூவிட பரமனிடம்   ஒரு ஜனனவர வேள்வி!   வீரம் மறந்து வரலாறு தொலைத்து   புயல்மழையில் பூங்குயிலாய் வாழ்வில் வீழ்ந்து   என் இளைஞர்க் கூட்டம்.   இளந்தூறலாய் தூவி உயர்த்தவோர்   விதி செய்ய உள்ள ஏக்கம்!   விழி மூடி விண் நோக்கி   விழும் மழைத்துளியில்   முகம் புதைக்கும் ஒரு கணம்   உடலணுக்களெல்லாம் ஆனந்தக்   கூத்தாடும் நீர் மேல் மழையாய்!   Kovil Pillai P.