எலிமென்டரி ஸ்கூல் படிக்கிற வயசில ஒரு சின்ன சாக்லெட்ட நமக்குத் தெரியாம ஒளிச்சி வச்சி தனியா சாப்பிட்டா, நம்ம ப்ரண்டு மேல ஒரு கோபம் வந்திருக்கும் (சிலருக்கு இப்போதும் கூட!). கண்டிப்பா அதையே பதிலுக்குச் செஞ்சி மனச தேத்திக்குவோம். மன்னிக்கத் தோணாத வயசு அது. கூட்டி கழிச்சி பார்த்தா, பெரும்பாலும் அதுதான் நட்பில் முதல் துரோகம். என்ன, அது அப்ப துரோகமாவும் தெரியாது, இப்ப அதெல்லாம் துரோகம்ன்னு ஒத்துக் கொள்ளவும் முடியாது.
எக்ஸாமுக்கு முந்தைய நைட்டுதான் நாலு பேரும் ஒரு ரெண்டு மணி நேரம் படிச்சிருப்பீங்க. அடுத்த நாள், மூனு பேரு அரை மணி நேரத்திலேயே எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தா, ஒருத்தர் மட்டும் ரெண்டு மணி நேரம் எழுதினா அது நட்புக்குச் செய்கிற மாபெரும் துரோகம் இல்லையா? இருந்தாலும் மதியம் படத்துக்கு நாலு பேரும்தான் போவீங்க. நாலு பேருக்கும் அரியர்ன்னு ரிசல்ட் வரும் போதுதான், துரோகத்தைப் பெருந்தன்மையோடு முழுமையா மன்னிக்கிறதில கிடைக்கிற மனநிறைவை புரிந்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு மனப்பக்குவமெல்லாம் ஆண்டவன் கொடுக்கிற வரம்.
ப்ரண்டோட ப்ரண்டோட… ப்ரண்ட அறிமுகம் மட்டும் படுத்தச் சொன்னா, உங்ககிட்டேயே அந்த “ப்ரண்ட” பத்திய விசயத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் குலோசாகிட்டு உங்கள கண்டுக்காம விட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்? இதத்தாண்டிய துரோகம் எதுமே இருக்க வாய்பில்லைன்னுத் தோணலாம். சில துரோகங்களை மறக்கவோ மன்னிக்கவோ முடியாதுதானே? ஆமாம் — குறைந்தபட்சம் காலமும், கடவுளும் இல்லாதிருக்கும் போது.
தெரியாமல் செய்கிற தவறெல்லாம் துரோகமாகாது. ஏறக்குறைய எல்லா துரோகத்திற்கும் பணம், பதவி மற்றும் பெண்-ஆண் உறவுதான் காரணமாயிருக்கிறது. அதனால்தான் நம் சிறு வயதில் துரோகம் பற்றியெல்லாம் பெரிதாக உணர்வதில்லை. எப்பொழுது தனக்கென்ற வாழ்க்கை ஒட்டத்தை நிர்ணயிக்க துவங்குகிறோமோ அப்போதுதான் துரோகம் போன்ற சில நம் அனுபவத்திற்கு வந்துப் போகின்றன. துரோகத்திற்கான தனியான வரையரையைத் தேடத் தேவையில்லை. எங்கெல்லாம் நம்பிக்கை உடைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் துரோகம் பிறப்பித்துக் கொள்கிறது.
நம்பிக்கையை மட்டுமே அடித்தளமாகக் கொண்டது நட்பு. நட்பை கண்டுக் கொள்ளாமல் தானாய்க் கரைந்து மறைய விடுவதுக் கூட ஒரு துரோகம்தான், மிகப்பெரியதும் கூடத்தான். நட்பில் இரண்டு வகையான துரோகங்களைக் காணலாம். முதலாவது — நட்பின் போக்கில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் துரோகம் செய்வது. “எட் டூ, ப்ரூட்டே” மிகச் சிறிய சொற்றொடர்தான். ஆனாலும் நட்பில் துரோகத்தினால் ஏற்படும் கையறு நிலையின் வேதனையைச் சொல்லி நிற்கின்றது. ஒரு மெல்லிய கையசையு. ஒரு சிறு பார்வை. அது மட்டும்தான். அதற்கு மேல் சொல்வதற்கு வேறேதும் இருப்பதில்லை. இரண்டாமாவது — துரோகம் செய்வதற்காகவே நட்பாய் நடிப்பது. உதடுகள் உதிர்க்கும் ஒவ்வொரு புன்னகையிலும் உறவைப் பறிக்கும் மதிமயக்கும் நஞ்சை உமிழ்கின்றன துரோகம் தோய்த்த நெஞ்சஞ்கள். அதற்காகதான் வள்ளுவர் நட்பாரய்தல் என்னும் அதிகாரத்தை எழுதியுள்ளார் போலும்.
மயானம் சென்று சேர்ந்த துரோகங்களின் வலி வழியாய் வலிமை பெற்ற இதயங்கள்தான் வாழ்க்கையின் யதார்தமறிந்து துடித்துக் கொண்டிருக்கின்றன. விதிவிலக்காய், நட்பில் துரோகம் மட்டும் ஒவ்வொரு துடிப்பிலும் மரணிக்கிற இதயத்தோடு வாழ்கின்ற சாபத்தைத் தந்துச் செல்கிறது. துரோகமே இல்லாத நட்பைப் பெருவதும், நட்பில் துரோகத்தை மன்னிப்பதும் எவ்வளவு சாத்தியம் என தெரியாது. இரண்டுமே சாத்தியம் என்ற நம்பிக்கையோடேயே வருகிற நண்பர்கள் தினத்தை வரவேற்போம்.

Comments