Skip to main content

Posts

Showing posts from February, 2014

மோகத்தை கொன்று விடு அல்லால்...

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே! - மனம் விரும்புதே உன்னை... உன்னை என திரையிசைக்காய் வைரமுத்து எழுதிய வரிகள் இவை. " காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்; மாணிழை கண்ணொவ்வேம் என்று " இது வள்ளுவரின் சில நூறு குறள்களில் ஒன்று. அன்றைய சங்கத் தமிழுக்கும் இல்லாமல் இன்றைய திரைவடிவுக்கும் இல்லாமல் வாழ்வியல் அறம் கூறியும், கொழுந்து விட்டுக் கொண்டிருந்த விடுதலை தீயினிடையிலும் பா வடித்தவர் பாரதியார். " கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" இது அவரது வீரம் தொனிக்கும் அச்சமில்லை பாடலின் வரிகள். எந்தக் கவிஞனுக்கும் இது அழகு என்பதால், காதல் சுவையில் பாரதியும் கவிதை எழுதியிருப்பது எனக்கொன்றும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மின்னல், வீசும் இளங்காற்று, மழை, மேகம், அந்திமாலை என எல்லாம் காதல் அரும்ப உகந்த காரணிகள் போலும்! பாரதியும் அப்படித்தான் துவங்குகிறார். " சந்திர னொளியில் அவளைக் கண்டேன்; சரண மென்று புகுந்து கொண்டேன்; இந்திரி யங்களை வென்று விட்டேன்; எனதெனாசையைக