சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே! - மனம் விரும்புதே உன்னை... உன்னை என திரையிசைக்காய் வைரமுத்து எழுதிய வரிகள் இவை. "காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்; மாணிழை கண்ணொவ்வேம் என்று" இது வள்ளுவரின் சில நூறு குறள்களில் ஒன்று. அன்றைய சங்கத் தமிழுக்கும் இல்லாமல் இன்றைய திரைவடிவுக்கும் இல்லாமல் வாழ்வியல் அறம் கூறியும், கொழுந்து விட்டுக் கொண்டிருந்த விடுதலை தீயினிடையிலும் பா வடித்தவர் பாரதியார். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" இது அவரது வீரம் தொனிக்கும் அச்சமில்லை பாடலின் வரிகள். எந்தக் கவிஞனுக்கும் இது அழகு என்பதால், காதல் சுவையில் பாரதியும் கவிதை எழுதியிருப்பது எனக்கொன்றும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
மின்னல், வீசும் இளங்காற்று, மழை, மேகம், அந்திமாலை என எல்லாம் காதல் அரும்ப உகந்த காரணிகள் போலும்! பாரதியும் அப்படித்தான் துவங்குகிறார். "சந்திர னொளியில் அவளைக் கண்டேன்; சரண மென்று புகுந்து கொண்டேன்; இந்திரி யங்களை வென்று விட்டேன்; எனதெனாசையைக் கொன்று விட்டேன்"
பெண்களின் அழகையும் குணத்தையும் வருணித்து கவிதை எழுதுவதுதான் மிக எளிதானக் காரியமாக இருக்கக்கூடும். எதுவெல்லாம் இயற்கையாகவே அழகானதாகவும் உயர்வானதாகவும் உள்ளதோ அதைவிட சற்று உயர்த்தி வரிகளை அமைத்துக் கொண்டால் போதுமானது. உண்மையாய் இருக்கப் போவதில்லை, குறைந்தபட்சம் உண்மையாய் இருந்தாக வேண்டும் என்ற அவசியமாவது இல்லை - மகிழ்விப்பது மட்டும்தானே குறிக்கோள்! "சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ; வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ" எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார் பாரதி.
காதலுக்கு கண்ணில்லை என்பது ஒருபுறம் அகமாய் இருக்க, கண்வழியாய் சொல்லிக் கொள்ளாத காதல் எல்லாம் மிக அரிதென்றே நினைக்கிறேன். காதலைத் தாண்டியும் விழிகளுக்குப் பேசத் தெரியும்."மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ - கண் பாராயோ? வந்து சேராயோ?", "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா", "கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!" என்பதெல்லாம் காதலில் திளைத்து பாரதி வடித்து வைத்த வரிகள்.
"காற்று வெளியிடைக் கண்ணம்மா! - நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்." என்று தன்னிலையில் கவி எழுதியதிலிருந்து இருந்து சற்று மாறி "வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!" என்று எழுதுகிறார். ஆண் குரலே என்றாலும் தனது வாழ்வில் ஒரு பெண்ணின் பங்களிப்பு நிலையை உணர்ந்து எழுதியதாக தோன்றுகிறதல்லவா? "அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்... துன்பம் தீர்வது பெண்மையிலடா!" என்பது பாரதியின் கருத்து. "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ?" என்பது பாரதியின் குரலைப் பிரதிபலிக்கும் பாரதிதாசனுடய அழகிய வரிகள். பெண்ணுரிமை, பெண் விடுதலை என்றெல்லாம் பேசுவது உண்மையாய் இருக்க வேண்டுமெனில் பெண் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்திருக்க வேண்டும். காதலில் பயணிக்கும் போது இதெல்லாம் மிக இயல்பாகவே வந்துவிடுமல்லவா? அதனால் தான் பாரதியால் "மனதில் உறுதி வேண்டும்... பெண் விடுதலை வேண்டும்" என பெண்களின் உரிமைக்கும் உயர்வுக்கும் குரல் கொடுக்க முடிந்தது.
காதலில் தனித்திருக்கும் நிலைதான் மிகவும் கொடியது போலும்! வாழ்வும் இல்லாமல் உயிரும் துறக்காமல் தூண்டில் முள்ளில் இடப்பட்ட புழுவின் நிலை வேதனையின் உச்சம்தான். அந்தோ பரிதாபம். பாரதிக்கும் அந்நிலை சபித்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த அழுத்தமான வரிகள். "தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே; சுடர் விளக்கினைப் போல்; நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடி; கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை; கொண்டு மிகவும் நொந்தேன்; வேண்டும் பொருளை எல்லாம் - மனது; வெறுத்து விட்டதடீ"
எந்நிலையிலும் ஏமாற்றம் வருத்தத்தையும் வலியையுமே தரும். காதலில் அவ்வலியின் ஆழம் கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். எனவேதான் அதனை நரகத்தில் உழுலுவதாக கூறுகிறார். காதலையும் அதனால் விளைந்த ஏமாற்றத்தையும் கடந்து கொஞ்சம் தெளிவு பிறந்தவுடன் உயிர்க் கண்ணன் முகமே மறந்து விட்ட பேதமையை எண்ணி வெட்கப்படுகிறார்.
மேனி கொதிக்குதடீ - தலை சுற்றியே
வேதனை செய்குதடி!
வானி லிடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்.
மோனத் திருக்குதடீ - இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழுலுவதோ?
வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இன்பமும், இன்பம் என்று ஒத்துக்கொள்ள மறுக்கும் நிலையும் இணைந்தே உணர்கிறோம். காதலும் அப்படியே! இதனையும் தாண்டி வந்தால் மற்றுமொரு உலகம் வரவேற்க்கும். அது இன்னமும் சவால்களோடு, இன்னமும் மகிழ்ச்சிக்கான விதைகளோடு, இன்னமும் விசாலமானதாய் இருக்கும்.
பி.கு.: கண்ணன், கண்ணம்மா, குழந்தை, குயில் என ஒவ்வொன்றின் மீதும் ஏற்றிச் எழுதப்பட்ட வரிகள் அனைத்தும் பாரதிக்குச் சொந்தம். பொருளையும், வரிசையும் திரித்துச் சொன்னது நான் ;)
Kovil Pillai P.

Comments