குலசேகரன் பட்டினம் வீரமனோகரி அம்மனை தெரிந்தவர்களுக்கு மட்டும் இப்பதிவு. கவிதையென்றெல்லாம் ஆராய்ந்துக் கொண்டிருக்காதீர்கள்.
விஞ்ஞானமே அது மெய்ஞானமென
உன்னருட் பார்வை பாராதிருந்தேன்.
பொய்ஞானமது.
இன்றில்லை! இனியுமில்லை!
சிறியேன் மடமை நீக்கி உயிர்
சிந்தையில் நிறைந்திடு முழுமதியே.
அன்றந்த செந்தில் வேலனின்
வேண்டுதல் மொழி ஏற்றாய்.
குருதியேந்தினாய்.
விதியுமில்லை! மதியுமில்லை!
சினம் காத்து குணம் ஒளிர
கருணைக் கொள்வாய் தாயே.
சிற்றிலையாய் சிறுமேகமாய் அலைகின்றேன்
இப்பிறப்பின் பயனுற விருப்புற்றேன்.
திக்கற்றேன்.
தெளிவுமில்லை! வழியுமில்லை!
அடியேனை முன்னிறுத்தி உன் விருப்பில்
வழி நடத்தேன் என்னிறையவளே.
திங்கள் சில தீர்ந்தோடட்டும்
உந்தன் பொற்பாதம் பற்றுவேன்.
யாசிப்பேன்.
வழக்குமில்லை! மறுப்பதுவுமில்லை!
குலம் சிறக்க வரம் கேட்பேன்
எனை ஆட்கொண்டருள்வாய் குலமகளே.
பி.கு: வீரமனோகரி என்ற பெண்ணை இன்னும் சில மாதங்களில் மணக்க இருக்கும் செந்தில்வேல் என்ற நண்பருக்காய் எழுதியது.
Kovil Pillai P.
விஞ்ஞானமே அது மெய்ஞானமென
உன்னருட் பார்வை பாராதிருந்தேன்.
பொய்ஞானமது.
இன்றில்லை! இனியுமில்லை!
சிறியேன் மடமை நீக்கி உயிர்
சிந்தையில் நிறைந்திடு முழுமதியே.
அன்றந்த செந்தில் வேலனின்
வேண்டுதல் மொழி ஏற்றாய்.
குருதியேந்தினாய்.
விதியுமில்லை! மதியுமில்லை!
சினம் காத்து குணம் ஒளிர
கருணைக் கொள்வாய் தாயே.
சிற்றிலையாய் சிறுமேகமாய் அலைகின்றேன்
இப்பிறப்பின் பயனுற விருப்புற்றேன்.
திக்கற்றேன்.
தெளிவுமில்லை! வழியுமில்லை!
அடியேனை முன்னிறுத்தி உன் விருப்பில்
வழி நடத்தேன் என்னிறையவளே.
திங்கள் சில தீர்ந்தோடட்டும்
உந்தன் பொற்பாதம் பற்றுவேன்.
யாசிப்பேன்.
வழக்குமில்லை! மறுப்பதுவுமில்லை!
குலம் சிறக்க வரம் கேட்பேன்
எனை ஆட்கொண்டருள்வாய் குலமகளே.
பி.கு: வீரமனோகரி என்ற பெண்ணை இன்னும் சில மாதங்களில் மணக்க இருக்கும் செந்தில்வேல் என்ற நண்பருக்காய் எழுதியது.
Kovil Pillai P.
Comments