தந்தையா? நண்பனா? என்றால் தந்தையென எளிதில் சொல்லிடலாம். தோழமையில் இதுவெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஒவ்வொரு விட்டு கொடுத்தலிலும் தனது மரணமின்மையை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் ஓர் உன்னத உறவு நட்பு. ஓடுகின்ற கால்கள், எழுதியாடும் விரல்கள், இசைக்கும் குரல்... எல்லாம் பெரியதுதான் - சுவாசமாய் நட்பு: இயல்பாய், எந்த ஒரு ஆர்பரிப்புமுமின்றி, ஆழமாய், உயிரோடு கலந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்.
தாயாகத் தோழி, தோழியாக தாய் - குவளைக்குள் நீராய் எந்த உறவிலும் தன்னை உட்புகுத்தி வெளிக்காட்டும் இணையற்ற உணர்வு நட்பு. என் நினைவில் நின்ற/ தேடிப்பிடித்த நட்புக்கான சில திரைப்பட பாடல் வரிகள் இந்த பதிவில்.
என்னுடைய அம்மாவுக்கு பிடித்த பாட்டு. அம்மாவுக்கு பிடித்ததாலேயே நான் கேட்டு பழகிய பாடல்.
பத்தாவது படித்த போது கேட்ட பாடல். காதல், நட்பு இரண்டிலுமே யதார்தத்தை அறியாமலேயே ஆழத்தை அடைந்ததாய் ஓர் மயங்கிய நிலையில் மகிழ்ந்து திரிந்த காலம். உண்மையில் இதுதான் நட்பு, இதுதான் காதல் என்று இப்போது கூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் வரையறைகளுக்கு அப்பற்பட்டது இது இரண்டும் என உறுதியாக சொல்ல முடியும். படமாகவும் என்னை கவர்ந்த 'தளபதி'யில் இருந்து சில வரிகள்.
ஆயுள் முழுவதும் பரந்து விரிந்த போதிலும் நட்புக்கென ஓர் காலம் உண்டெனில் அது கல்லூரி காலமாகதான் இருக்கும். வாழ்வின் திசை தேடி நிற்கும் இப்பருவத்தில் திசைக்காட்டிகளாக உருவெடுத்து தோள் சேர்த்து கரம் நீட்டும் நட்பு.
"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்" என்பதற்கு பதிலாக "பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம்" என்று உதித் நாராயண் உச்சரித்ததாய் வைரமுத்து தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். மொழியை கடந்து வந்து பாடிய அந்த குரலுக்காகவே இந்த பாடலை விரும்பி கேட்பேன். நட்பின் சுதந்திரத்தை சொல்லும் இந்த பாடல் முழுவதும் துளி கூட சோகமில்லாத வரிகள்.
கல்லுரி நாட்களில் நண்பர்கள் கேட்டு மகிழ்ந்த பாடல்.
நட்பிலும் ஏமாற்றம் உண்டு. இல்லையெனில் 'நட்பு' மட்டுமின்றி 'நட்பாராய்தல், தீ நட்பு, ...' என வள்ளுவர் ஐந்து அதிகாரங்களாய் நீட்டியிருக்க மாட்டார். எனக்கு நேர்ந்ததில்லை என்ற போதும் இந்த புலம்பலும் எனக்கு பிடிக்கிறது.
வாழ்கையின் பல்வேறு நிலைகளை கடந்து நிற்கும் போது நிச்சமாய் நெஞ்சைத் தொடும் பாடல். நாம் நமது முதுமையை நெருங்க நெருங்க தனது வலிமையை கூட்டிக் கொள்ளும் வரிகள். காதல், தத்துவம்... என எந்த வகையை எடுததாலும் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று கண்ணதாசனுடையதாக இருக்கும். நட்புக்கான வகையில் ஒன்று இந்த பாடல்.
'தினம் தினம் உன் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே' என்ற வேதனை மொழிகளெல்லாம் காதலுக்கு மட்டுமென நினைத்திருந்தேன். சில வேளைகளில் நட்பிலும்... மறுக்கின்ற விழிகளையும் மூடி பார்க்க செய்யும் 'கண் மூடினால்... இருளேது நீயே தெரிகிறாய்' வரிகள்.
Kovil Pillai P.

Comments