Skip to main content

Posts

Showing posts from August, 2023

கூடா நட்பு

  அகராதிகள் பதித்துக் கொள்ளாத 'அழகான' வார்த்தைகளையெல்லாம் நண்பர்கள் இல்லாமல் வேறு எப்படி கற்றுக் கொண்டிருக்க முடியும்? இல்ல, இது மாதிரியான நண்பர்களெல்லாம் தவிர்க்க வேண்டியவர்களா? எதுவும் இங்க சரியுமில்ல தவறுமில்ல போடா என்ற வரிகள் பழகிப்போனதாலயோ என்னவோ "தவறான நட்பென்று ஒன்று இருக்க முடியுமா?" என்று யோசிக்கும் போதே யோசிக்கிறதை நிறுத்திக்கனும்னு தோன்றியதையும் மீறிச் சிந்தித்ததாலேயே இந்தப் பதிவு. எந்த ஒரு தேடலுக்கும் திருக்குறளையும் தோண்டிப் பார்க்கிறது வழக்கம். அட, இருக்கிறதே! நட்பியல் என்ற பிரிவில் பல அதிகாரங்கள், குறிப்பாக, "தீ நட்பு", "கூடா நட்பு" என்ற தலைப்புகளில். கூடா நட்பு என்றெல்லாம் ஒன்று இருக்கமுடியாதென்ற வாக்கில் நம்பும் போது இப்படி வள்ளுவரே சொல்லியிருக்காரேன்னு பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றம்தான். என்னுடைய நண்பர்களெல்லாம் எனக்குத் தானாகவே அமைந்தது போலத்தான் இருக்கிறது. பெரும்பாலும் இடம் சார்ந்ததுதான் - வீட்டுப்பக்கம், பள்ளி, கல்லூரி, வேலை. மேலோட்டமாய் பார்த்தால் எந்த விதிகளுமே வைத்துத் தேர்ந்தெடுத்ததாய் தோன்றவில்லைதான். ஆனால் எல