தந்தையா? நண்பனா? என்றால் தந்தையென எளிதில் சொல்லிடலாம். தோழமையில் இதுவெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஒவ்வொரு விட்டு கொடுத்தலிலும் தனது மரணமின்மையை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் ஓர் உன்னத உறவு நட்பு. ஓடுகின்ற கால்கள், எழுதியாடும் விரல்கள், இசைக்கும் குரல்... எல்லாம் பெரியதுதான் - சுவாசமாய் நட்பு: இயல்பாய், எந்த ஒரு ஆர்பரிப்புமுமின்றி, ஆழமாய், உயிரோடு கலந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும். தாயாகத் தோழி, தோழியாக தாய் - குவளைக்குள் நீராய் எந்த உறவிலும் தன்னை உட்புகுத்தி வெளிக்காட்டும் இணையற்ற உணர்வு நட்பு. என் நினைவில் நின்ற/ தேடிப்பிடித்த நட்புக்கான சில திரைப்பட பாடல் வரிகள் இந்த பதிவில். என்னுடைய அம்மாவுக்கு பிடித்த பாட்டு. அம்மாவுக்கு பிடித்ததாலேயே நான் கேட்டு பழகிய பாடல். பத்தாவது படித்த போது கேட்ட பாடல். காதல், நட்பு இரண்டிலுமே யதார்தத்தை அறியாமலேயே ஆழத்தை அடைந்ததாய் ஓர் மயங்கிய நிலையில் மகிழ்ந்து திரிந்த காலம். உண்மையில் இதுதான் நட்பு, இதுதான் காதல் என்று இப்போது கூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் வரையறைகளுக்கு அப்பற்பட்டது இது இரண்டும் என உறுதியாக சொல்ல முடியும். படமாகவும் என்னை கவர...
Beyond your imagination