நான் பெரும்பாலும் சிறுகதை, நாவல் வகையான புத்தகங்களைப் படிப்பதை தவிர்த்து விடுவேன். இருந்தாலும் விதிவிலக்காக சில (பல புத்தகங்களை) படித்ததுண்டு. சமீபத்தில் ஜெயமோகனின் அறம் என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தைப் படித்தேன். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஓன்று நமக்கு கிடைத்து அது ஒரு மதிப்புமிக்க பொருளாய் உணரும் போது இறைவனுக்கு ஒரு நன்றி சொல்லத்தான் தோன்றுகிறது. The Kite Runner கிடைத்து அதைப் படித்து முடித்தவுடன் ஒரு மனநிறைவை உணர முடிந்தது. இப்பொழுது அறம்.
யாரோ ஜெயமோகனாம்; ஏதோ அறம் என்ற சிறுகதை தொகுப்பு புத்தகமாம்; கனவில் கூட படிக்க நினைக்காத ஒன்று. மழை என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள். பரிசாக இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்கள். படித்துப் பார்ப்போமே என்று படித்தேன். ஓலைச்சிலுவை என்ற தலைப்பில் ஒரு சிறுகதை. எங்கேயோ கேட்டது போல இருந்தது. சில பத்திகளை படித்தவுடன் புரிந்து விட்டது. பல மாதங்களுக்கு முன் எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர் இந்தப் புத்தகத்தை குறிப்பிட்டு ஓலைச்சிலுவை கதையைப் பற்றி சொல்லியிருந்தார். அதன்பின் புத்தகத்தையும், நூலாசிரியரையும் முழுவதுமாக மறந்துப் போனேன். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி கமல் பகுதி நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஆனாலும் இப்புத்தகத்தை பற்றிய பகுதி கவனத்திற்கு வரவே இல்லை. ஒரு மந்திரப் பாதை வழியாக இந்த புத்தகம் என்னை வந்தடைந்திருக்கின்றதோ என வியக்க வைக்கிறது.
அறம் என்ற தலைப்பில் முதல் கதை துவங்கியது. சில பக்கங்களைப் படித்ததுமே இந்த ஒருக் கதையோடு நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன். வணங்கான்-னை கண்முன் நிகழ்த்திக் கொண்டவுடன் சோற்றுக் கணக்கு நெஞ்சில் ஒட்டிக் கொண்டது. மத்துறு தயிர், மயில் கழுத்து, நூறு நாற்காலிகள் என வந்துக் கொண்டே இருந்தது. மொழிநடையா? கதைக் கருவா? எது என்னை மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது என வியந்துக் கொண்டே படித்தேன். கோட்டியின் பூமேடை போன்ற மனிதர் ஒருவரை பள்ளி நாள்கள் முழுவதும் பார்த்து கவனித்ததுண்டு. கம்யூனிசம் என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் முதலில் அவர் நினைவுதான் வரும். உலகம் யாவையும், பெருவலிகள் கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பலமுறை பொள்ளாச்சி சென்றதுண்டு. யானைக் கூட்டத்தைப் பார்த்ததுண்டு. ஆனால் இப்படி ஒரு யானை டாக்டர் இருப்பார் எனத் தெரியாது. உண்மையில் இதயம் முழுமையும் ஆட்கொண்டக் கதை ஓலைச்சிலுவை. அறம் என்ற கருவை மையாகக் கொண்டு தொகுக்கப்டட 12 சிறுகதைகள்தான் இப்புத்தகம். எங்கேயோ ஒரு அற வாழ்க்கையை வாழ்ந்துச் சென்ற மனிதர்களின் சுயசரிதை கதை வடிவில். நிஜத்தில் நூலாசிரியரின் உண்மை வாழ்க்கை அனுபவங்கள். படித்ததில் மன நிறைவு.
Kovil Pillai P.

Comments