கோர்வையற்ற வார்த்தைகளாகவே முடித்துவிடப் போகிறேனோ என்ற தோன்றலோடே இந்தப் பதிவைத் துவங்குகிறேன். முன்னெச்சரித்தும் கொள்கிறேன். பரண் ஏறி வெகுகாலமாகி, துருக்கள் துகள்களாகும் நிலையாகிவிட்ட நட்பெல்லாம் இன்னமும் தேவைதானா என்ற எண்ண ஓட்டம்தான் இது. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால ஓட்டத்தின் கட்டாயமும், மிக இயல்பாய் இந்த உலகமே பழகிக்கொண்டதுமான நியதிதான். மாற்றம் ஒன்றே மாறாதது என்றோ, மாற்றம் என்பதே வாழ்வின் அடையாளம் என்பதோ நாம் எப்போதும் சொல்வதுதான். நட்பின் நிலையும் இதற்கு அப்பாற்பட்டதல்ல என்றே என் மனம் சொல்கிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, புதிய நட்பைத் தேடிச் செல்வதும் ஏற்றதே அல்லவா? உண்மையில் பழையது/புதியது, தேவையானது/தேவையில்லாதது என நட்பில் பார்ப்பதற்கு முன், நட்பென்றால் என்னவென்ற ஆழ்ந்த புரிதல் இருந்தால் மட்டுமே இதற்கான ஒரு தெளிவான விவாதத்திற்குள் சென்று பயணிக்க முடியும். நிற்க! ஒரு முனையில் - காலங்காலமாய் ஒரே ஊர், ஒரே பள்ளி, கல்லூரி, ஒரே இடத்தில் பணியென எல்லா இடங்களிலும் தொடரும் ஒரே நட்பு. மறுமுனையில் - பள்ளி முடிப்பதிற்குள் நான்கைந்து இடம் மாறி, ஒன்றுக்கொன்றான தொடர்புகள் அறுபட்ட வாழ...
Beyond your imagination