நெடுந்தொலைவு பயணிக்கின்ற நட்புகளெல்லாம் வரம் என்றால், பயணித்த சிறு காலற்றே பெருந்தாக்கம் கொடுக்கும் நட்பெல்லாமும் வரமேயாகும். அப்படி ஒரு நட்புதான் ஹன்சிக்கு போலா தந்து சென்றது. போலா வந்த பிறகுதான் "டால்மேஷன்" வகை நாய்களைப் பற்றியே எனக்குத் தெரியும். நல்ல வெள்ளை நிறத்தில் அங்கங்கே கருப்பு திட்டுக்கள் பார்க்கவே புதுமையாக இருக்கும். போலா சில மாதக் குழந்தைதான், ஆனால் ஹன்சியைவிட இரு மடங்கு உயரம். பயங்கர துருதுரு. நாய்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், நட்பை வெளிக்காட்டிக் கொள்வதிலும் குறையிருக்காது. அந்த நம்பிக்கையில் தான் போலாவை வீட்டிற்குக் கூட்டி வந்தோம். ஹன்சி, ஏறக்குறைய ஒன்றரை வயதில், எங்கள் வீட்டுக்கு வந்த போது அதனால் பின்னங்கால்களால் நிற்க முடியாது. கொஞ்சம் நகர வேண்டுமென்றால் கூட, உடம்பை தரையில் தேய்த்து இழுத்துத்தான் நகரும். அதைப் பார்க்கவே வேதனையாக இருக்கும். பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்த பயனுமில்லை. பெரும்பாலான நேரங்களில் அதன் கண்களின் இயக்கம்தான் அதன் மொத்த இயக்கமுமே. எந்த சத்தமும் கூடச் செய்யாது. ஏதாவது காப்பகத்தில் விட்டுவிடலாம் என்று கூட அடிக்கடி நினைத்தோம்...
Beyond your imagination