நதி#நட்பு தாமரைகளும் ரோஜாக்களும் ஒரு மொட்டாயிராமல் மலராக மலர்ந்துவிடப் போவதில்லை. எந்த மலரும் அப்படித்தான். அப்படித்தானே ஒரு நதியின் துவக்கம் கூட! ஏதோ ஒரு சிறு ஊற்று. ஏதோ ஒரு சிறு உந்துதல். சிறு ஓட்டம். இயற்கையின் நியதியா, கடவுள் விதித்து வைத்த முடிவா என்ற கேள்வியெல்லாம் பொருளற்றவையே! இதுதான் வழி, இப்படித்தான் பயணம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. கடல் போய் சேருமென்ற கனவெல்லாம் இருப்பதற்கான வாய்ப்பொன்றும் இல்லை. முதலே கூட முடிவாகவும் இருக்கலாம். அப்படித்தானே ஒரு நட்பின் துவக்கமும் கூட! நதி#நட்பு சிகப்பு ஒரு வண்ணம்தான். ஆனால் பார்க்கின்ற சிகப்பெல்லாம் ஒன்றல்ல. சேர்க்கையின் விகிதத்திற்கேற்ப அதற்குள் ஆயிரமாயிரம் கலவைகள். எந்த வண்ணமும் அப்படித்தான். அப்படித்தானே ஒரு நதியின் தன்மையும் கூட! கருங்கல் பாறை நீர் வந்து இணைந்துக் கொள்ளலாம். செம்மண் வழியோடிய சிற்றாறு சேர்ந்துக் கொள்ளலாம். குப்பையை அள்ளி வரும் கழிவுநீரும் கலக்கலாம். தன் நீர் தன்மையைத் தந்து தன்னோடு கலந்த தன்மையையும் ஏற்று பயணிக்கும் நதி. நல்லது கெட்டது என்ற பேதமெல்லாம் இல்லை. அத்தருணத்தில் எது மிகுதியோ அதுவே அவ்விடத்தில் அந்நதியி...
Beyond your imagination