எலிமென்டரி ஸ்கூல் படிக்கிற வயசில ஒரு சின்ன சாக்லெட்ட நமக்குத் தெரியாம ஒளிச்சி வச்சி தனியா சாப்பிட்டா, நம்ம ப்ரண்டு மேல ஒரு கோபம் வந்திருக்கும் (சிலருக்கு இப்போதும் கூட!). கண்டிப்பா அதையே பதிலுக்குச் செஞ்சி மனச தேத்திக்குவோம். மன்னிக்கத் தோணாத வயசு அது. கூட்டி கழிச்சி பார்த்தா, பெரும்பாலும் அதுதான் நட்பில் முதல் துரோகம். என்ன, அது அப்ப துரோகமாவும் தெரியாது, இப்ப அதெல்லாம் துரோகம்ன்னு ஒத்துக் கொள்ளவும் முடியாது. எக்ஸாமுக்கு முந்தைய நைட்டுதான் நாலு பேரும் ஒரு ரெண்டு மணி நேரம் படிச்சிருப்பீங்க. அடுத்த நாள், மூனு பேரு அரை மணி நேரத்திலேயே எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தா, ஒருத்தர் மட்டும் ரெண்டு மணி நேரம் எழுதினா அது நட்புக்குச் செய்கிற மாபெரும் துரோகம் இல்லையா? இருந்தாலும் மதியம் படத்துக்கு நாலு பேரும்தான் போவீங்க. நாலு பேருக்கும் அரியர்ன்னு ரிசல்ட் வரும் போதுதான், துரோகத்தைப் பெருந்தன்மையோடு முழுமையா மன்னிக்கிறதில கிடைக்கிற மனநிறைவை புரிந்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு மனப்பக்குவமெல்லாம் ஆண்டவன் கொடுக்கிற வரம். ப்ரண்டோட ப்ரண்டோட… ப்ரண்ட அறிமுகம் மட்டும் படுத்தச் சொ...
Beyond your imagination