தெய்வீக காதல்னு சொல்றாங்களே, அப்படி ஏதாவது இருக்கா? தெய்வீகம்னாலே எழுகின்ற வழக்கமான தேடல்தான். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றே நினைத்தாலும், இருந்தால் இப்படி இருக்குமோ என தோன்றும் சில விஷயங்கள் இப்பதிவில்.
நாளையைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கத் தெரியாமல் ஒரு சில கணங்களுக்குள்ளே வாழ்ந்து மறைந்து உயிர் செல்லும் சில உணர்வுகள் மட்டுமே காதலென்று நம்பினால் அந்நம்பிக்கையில் தெய்வீகம் ஒளிந்திருக்கலாம்.
காதலுக்கான பொருள்களென பட்டியலிட்டு அதை செவ்வனே செய்து காதலுக்கு வலிமை சேர்க்க வேண்டுமென சிந்திக்க அறிந்திராத மனம், பிரிதலையும் பிரிதலென நோக்காமலிருக்கும் போது அது தெய்வீகமாகலாம்.
எந்த ஒரு காதலில் உண்மைகளும் பொய்களும் அர்த்தமற்றவையாகிக் கொண்டிருக்கிறதோ அது தெய்வீகத்தை நோக்கி பயணிக்கின்றதெனலாம்.
காதலின் உருவமென ஆயிரமாயிரம் முறை யோசித்து கற்பனைகள் செய்து வைத்த அத்தனைக்கும் விலகி அதிகாலை புல்லின் நுனி மீதிருக்கும் பனித்துளியை ரசிக்கும் போது அதன் பிம்பங்களை களைத்து மனதை இழுத்துச் செல்லும் ஒர் பிம்பம் கூட தெய்வீக காதலுக்கான வரையறைகளின் முற்றுப்புள்ளியாயிருக்கலாம்.

Comments