போகிற போக்குல மனசத் தொட்டு பொண்ணுத்தாயி போயிட்டா, நீங்க உடனே "அவள் வருவாளா அவள் வருவாளா, என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா, பூமி மீது நானும் பிறந்ததிற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு"ன்னு பாட்டு கட்டுவீங்க. ரெண்டு மூணு நாளு கழிச்சி "எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை. நீ வருவாயோ இல்லை மறைவாயோ"ன்னு புலம்பக் கூட செய்வீங்க. "கொஞ்சம் நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பான்னு" யாரவது ஒரு பிரண்டு உசுப்பேத்தி விடனும், இல்லான அதுதான் உண்மைன்னு நீங்களே உங்களத் தேத்திக்கனும். இப்படித்தான் காதல் ஆரம்பிக்குமோ? காதல் என்றால் என்ன? இது ரொம்ம சிம்பிளுங்க! ஒரு கல்லும் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் அதுதான் காதல். சில சமயம் ஒரு சொல் சில மெளனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் கூட காதல்னு சொல்லலாம். இன்னும் கொஞ்சம் கவித்துவமா சொல்லனும்னா "இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது"ன்னு வச்சிக்கிலாம். அப்கோர்ஸ், அது நமக்கெல்லாம் புரியாது. உங்களுக்கு உவமையா சொன்ன பிடிக்கும்னா, இது ஓ.கே வான்னு பார...
Beyond your imagination