மிகுந்த வியப்பிற்கும் மெல்லிய சந்தேகத்திற்கும் இடையில் எழும் வினா - எப்படி வாழ்வின் அத்துனை கலையிலும் புலமையின் மெருகோடு ஒருவரால் கவி எழுத முடியும்? திருக்குறள் ஒருவரால் மட்டும் எழுதப்படாமலிருக்குமோ? ஆராய்ச்சி தேவையில்லை - முற்றுப்புள்ளிகளுக்காகவே படைக்கப்பட்ட கடவுள் இருக்கிறார். "தெய்வ புலவர்" என்பதை பெருமையுடன் ஏற்பதில் மகிழ்ச்சியே! பள்ளியில் படித்த திருக்குறளே நான் படித்த முதல் தன்னம்பிக்கையூட்டும் புத்தகம் என்பதை இப்போது அறிகிறேன். நெஞ்சில் நிறுத்திக் கொண்ட பலவற்றுள் இரண்டு இங்கு.
88 குழந்தைகளில் ஒன்று மதி இறுக்கத்தோடு (Autism) பிறக்கின்றதாம். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவில் ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றோம் - இக்குழந்தைகள் பிறந்தவுடனே! எதற்கும், எவருக்கும் எது தேவையோ அதை வழங்க இயற்கை தவறுவதேயில்லை. இயேசுவை காட்டிக் கொடுக்க ஒரு யூதாசு பிறப்பிக்கப்படாமல் இருந்தால் கிறித்துவம் ஏது? ஒளித்து வைத்து ஒரு கண்ணாமூச்சி வேண்டுமானால் விளையாடும் - இந்த தேடலில் தானே உயிரின் ஓட்டமே உள்ளது! மதி இறுக்கத்தோடு பிறந்த தன் மகனது வாழ்க்கைக்காக தன்னையே அர்பணித்து மகனை வெற்றி வீரானாய் உருவாக்கும் தந்தை, அதற்குத் துணை நிற்க்கும் நட்பும், உறவும். ஹரிதாஸ் - நான் சமீபத்தில் பார்த்த தமிழ்படம். மென்மையாய், ஓவியமாய், மனதின் ஆழம் தேடி நிறைந்து கொள்ளும் மந்திர வார்த்தைகள்:
Kovil Pillai P.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்சிவப்பு வண்ணம் பூசிக் கொண்ட எண்ணங்களுக்கு மத்தியில் மட்டுமே மலரும் அழகான, வலிமையான வரிகள். பொருள் தெரியாத சிறு வயதிலேயே பிடித்துப்போன பாடல், இனியும் பிடிக்காமல் போக எந்த காரணமும் பிறக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்.
உள்ளத் தனையது உயர்வு.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்.
தோல்வி நிலையென நினைத்தால்மரணிக்கத் தெரியாத நினைவுகளை உயிர் முழுவதும் புதைத்துச் சென்ற கல்லூரி நாட்களில் "ஓவ்வொரு பூக்களுமே" பாடலில் வரும் கலைஞர்களைப் போன்ற மாணவர்களை பார்த்ததுண்டு. எப்போதாவது கரம் பிடித்து திசை காட்டியதுமுண்டு. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர்கள் நினைவுதான் வரும். வாழ்விற்கு நம்பிக்கையூட்டும் வார்தைகளை ஒவ்வொரு வரியிலும் சுமந்து சுகந்தம் வீசும் பாடல்.
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
88 குழந்தைகளில் ஒன்று மதி இறுக்கத்தோடு (Autism) பிறக்கின்றதாம். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவில் ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றோம் - இக்குழந்தைகள் பிறந்தவுடனே! எதற்கும், எவருக்கும் எது தேவையோ அதை வழங்க இயற்கை தவறுவதேயில்லை. இயேசுவை காட்டிக் கொடுக்க ஒரு யூதாசு பிறப்பிக்கப்படாமல் இருந்தால் கிறித்துவம் ஏது? ஒளித்து வைத்து ஒரு கண்ணாமூச்சி வேண்டுமானால் விளையாடும் - இந்த தேடலில் தானே உயிரின் ஓட்டமே உள்ளது! மதி இறுக்கத்தோடு பிறந்த தன் மகனது வாழ்க்கைக்காக தன்னையே அர்பணித்து மகனை வெற்றி வீரானாய் உருவாக்கும் தந்தை, அதற்குத் துணை நிற்க்கும் நட்பும், உறவும். ஹரிதாஸ் - நான் சமீபத்தில் பார்த்த தமிழ்படம். மென்மையாய், ஓவியமாய், மனதின் ஆழம் தேடி நிறைந்து கொள்ளும் மந்திர வார்த்தைகள்:
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயேஇது போல எத்தனையோ தமிழ் பாடல்களின் இணையான கருத்துக்கள் எங்கோ ஏதோ ஒரு நூலின் சில நூறு வரிகளாய்.
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே!
...
விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்கு தெரியது
அது மரமாய் வளரும் காலவரும்
அது மண்ணுக்குள் உறங்காது.
Kovil Pillai P.
Comments