மிகுந்த வியப்பிற்கும் மெல்லிய சந்தேகத்திற்கும் இடையில் எழும் வினா - எப்படி வாழ்வின் அத்துனை கலையிலும் புலமையின் மெருகோடு ஒருவரால் கவி எழுத முடியும்? திருக்குறள் ஒருவரால் மட்டும் எழுதப்படாமலிருக்குமோ? ஆராய்ச்சி தேவையில்லை - முற்றுப்புள்ளிகளுக்காகவே படைக்கப்பட்ட கடவுள் இருக்கிறார். "தெய்வ புலவர்" என்பதை பெருமையுடன் ஏற்பதில் மகிழ்ச்சியே! பள்ளியில் படித்த திருக்குறளே நான் படித்த முதல் தன்னம்பிக்கையூட்டும் புத்தகம் என்பதை இப்போது அறிகிறேன். நெஞ்சில் நிறுத்திக் கொண்ட பலவற்றுள் இரண்டு இங்கு. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர். சிவப்பு வண்ணம் பூசிக் கொண்ட எண்ணங்களுக்கு மத்தியில் மட்டுமே மலரும் அழகான, வலிமையான வரிகள். பொருள் தெரியாத சிறு வயதிலேயே பிடித்துப்போன பாடல், இனியும் பிடிக்காமல் போக எந்த காரணமும் பிறக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன். தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா மரணிக்கத் தெரியாத நினைவுகளை உயிர் முழுவதும் புதைத்துச்...
Beyond your imagination