எப்பொழுதாவது பழைய திரைப்பட பாடல்களை கேட்பதுண்டு, கேட்கும்போதெல்லாம் அதன் சுவைதனில் மூழ்காமல் இருப்பதில்லை, இருக்க முயன்று தோற்ற நாள்களும் உண்டு. பாடலின் இசை, படமாக்கிய விதம், நடிகர்களின் பாவங்கள் மற்றும் அழகிய தமிழ் சொற்களின் கலவை உண்மையாகவே கேட்போரை மெய்மறக்கச் செய்யும். இன்னும் ஒருமுறை இம்மாதிரியான பாடல்கள் தோன்றுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன் (எப்பொழுதுமே நல்ல பாடல்கள் வருகின்றன என்பதை மறுக்கவுமில்லை).
உன் கண்ணில் நீர் வழிந்தால்
திரைப்படம்: வியட்நாம் வீடு
இசை: கே. வி. மகாதேவன், புகழேந்தி
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்னதாசன்
"என் தேவையை யாரறிவார்... உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்" - மிகச் சிறந்த பாடல் ஒன்றுக்கான அத்தனை பாங்கும் கொண்ட வரிகள்(ஒலி + ஒளி). திருமண உறவில் நீண்ட பயணம் கொண்ட எவரையும் உணர்ச்சிப்பூர்வமாக்கும் தன்னிகரில்லாத பாடல்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
திரைப்படம்: அகத்தியர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: டி.கே.கலா
இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
திரைப்படம்: வேட்டைக்காரன்
இசை: எம்.எஸ்.வி
குரல்: டி.எம். சௌந்தரராஜன்இயற்றியவர்: கண்ணதாசன்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: பழையது
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஆடியடங்கும் வாழ்க்கையடா
திரைப்படம் : நீர்க்குமிழி
இசை : V. குமார்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
தமிழ் பேசும் எவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பாடல் வரிகளை முணுமுணுக்காமல் இருக்கப் போவதில்லை.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
பி.கு.: கடந்த சில நாள்களில் கேட்ட பாடல்களில் சிலதான் மேலுள்ளவை. இதை விடவும் கேட்டு ரசித்த பாடல்கள் பலவுண்டு.
Kovil Pillai P.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
திரைப்படம்: வியட்நாம் வீடு
இசை: கே. வி. மகாதேவன், புகழேந்தி
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்னதாசன்
"என் தேவையை யாரறிவார்... உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்" - மிகச் சிறந்த பாடல் ஒன்றுக்கான அத்தனை பாங்கும் கொண்ட வரிகள்(ஒலி + ஒளி). திருமண உறவில் நீண்ட பயணம் கொண்ட எவரையும் உணர்ச்சிப்பூர்வமாக்கும் தன்னிகரில்லாத பாடல்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
திரைப்படம்: அகத்தியர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: டி.கே.கலா
இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
திரைப்படம்: வேட்டைக்காரன்
இசை: எம்.எஸ்.வி
குரல்: டி.எம். சௌந்தரராஜன்இயற்றியவர்: கண்ணதாசன்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: பழையது
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஆடியடங்கும் வாழ்க்கையடா
திரைப்படம் : நீர்க்குமிழி
இசை : V. குமார்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
தமிழ் பேசும் எவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பாடல் வரிகளை முணுமுணுக்காமல் இருக்கப் போவதில்லை.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
பி.கு.: கடந்த சில நாள்களில் கேட்ட பாடல்களில் சிலதான் மேலுள்ளவை. இதை விடவும் கேட்டு ரசித்த பாடல்கள் பலவுண்டு.
Kovil Pillai P.
Comments
Addendum:
Ullathil nalla ullam - Karnan
Pen ondru kanden pen angu illai - Padithal mattum podhuma
are some of the beautiful songs that soothes my soul.
-Madhan