இந்த பதிவை எழுத நினைத்து சில வரிகளை யோசித்த போதே இது ஒரு நீண்ட பதிவு என உணர முடிந்தது. பொறுமையாக படித்து நேரத்தை வீணடிக்காமல், ஸ்காரால்பாரை இழுக்கின்ற வேகத்திலேயே கண்ணில் தெரிவதை படித்தாலே போதும். காதல் இல்லாத தமிழ் படங்கள் அரிது என்பதால் காதல் பாடல்களுக்கும் பஞ்சமே இல்லை. சமீபத்திய பாடல்களே நூற்றுக் கணக்கில் இருக்கும். ஒரு சில பாடல்களே இங்கு - சிறந்த பாடலென்றோ, எனக்கு பிடித்த பாடலென்றோவெல்லாம் எதுவும் இல்லை. சில விஷயங்களை சொல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுத்துக் கொண்டது, அவ்வளவுதான்.
நட்பும், காதலும் இதுதான் என்று வரையறுத்து கூற முடியாது, பண்புகளை பட்டியலிட்டு சரி பார்த்துக் கொள்ளக் கூடாதது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. இரண்டுமே கணப் பொழுதிலும் உணர்ந்துக் கொள்ளலாம், காலப் போக்கிலும் அறிந்துக் கொள்ளலாம். ஆனாலும் அடிப்படையில் ஒன்றுதான் - உடல், பொருளையெல்லாம் கடந்து நிற்கின்ற உணர்வுநிலை. எதிர்பாலாருடனான நட்போ, காதலோ தங்களுக்குள் பெரிதான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில்லை. நுழிலையான மெல்லிய வேறுபாடுகள்தான் - தனித்துக் காட்ட அதுவே போதுமானது. அதை உணர முடியாத போதுதான், நட்பா? காதலா? என்ற தடுமாற்றம். அதில் தவறொன்றும் இல்லை.
"நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே" என்ற வைரமுத்துவின் வரிகள் காதல் நொடி நேரத்திலும் வந்து விடும் என்பதை அழகாகச் சொல்லும். காரணம் என்ன? யாருக்குத் தெரியும்? கடவுளையும், முன்பிறவியையும் கொஞ்சம் நம்பித்தான் ஆக வேண்டும் போலும்! தொட்டி ஜெயா படத்தில் ஒரு பதினைந்து நிமிடக் இரயில் பயணக் காட்சிகளில் ஒரு அழகானக் காதலை காட்டியிருப்பார் டைரக்டர் துரை. சின்ன சின்ன பார்வைகளோடு, அதிகம் வார்தையில்லா காட்சிகளின் பின்னணியில் வரும் இசை "உயிரே என் உயிரே" என வரி வடிவம் எடுக்கும் போது மிக நன்றாக இருக்கும்.
முன்பே சொன்னது போல காதலுக்கு இதுவெல்லாம் இருக்க வேண்டும், இதுவெல்லாம் இருக்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை. நீங்கள் எதையெல்லாம் வெறுக்கிறீர்களோ அதையெல்லாம் கொண்ட ஒருவரோடுக் கூட நீங்கள் காதல் வசப்படக்கூடும். எல்லாவற்றையும் மறைக்கின்ற சக்திக் காதலுக்கு உண்டு. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். "நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி.." என்பதிலிருந்தே அது எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்பது தெரியும். பெறும்பான்மையானப் பாடல்கள் பெண்களை மிகைப்படித்தியேக் காட்டும். கொஞ்சம் வித்தியாசமாக இந்தப் பாடல்.
காதல் வந்து விட்டால், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, இத்தனை நாள் பழகி வந்த பழக்கமெல்லாம் மாறி இயல்பு நிலை என்ற ஒன்றே இல்லாமல் போய் விடும். "மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டு போனதில்லை" என்று காதலின் தாக்கத்தை அழுத்தி் சொல்லும் வரிகள் பல உண்டு. காதலை பிசாசாக நிறுத்தி, காதலுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கூறும் வரிகள் - குழந்தையைப் போல தமிழைக் கொலை செய்யும் எனக்கு பிடித்த அந்த வட இந்தியக் குரலில்!
காதலிப்பதாக தான் விரும்பும் பெண்ணோ ஆணோ கூறி விட்டால், அந்த காலத் துளிக்கு இணையான இன்பம் பெறும் தருணம் எதுவும் இல்லை போலும். "ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் என்று, அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்" என ஏங்குவதும், " கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்" என யாசிப்பதும் அம்மாதிரியான சுகத்துக்காகதான். காதலிப்பவரின் பதிலுக்காக உயிருள்ள வரைக் கூட காத்திருப்பார்களாம்.
காதலிப்பவர்களுக்குள் கொஞ்சம் கவித்துவம் எட்டிப் பார்க்கும். கவிஞர்களுக்கு எப்போதும் கற்பனை அதிகம். காதலைச் சொல்லும் கவிஞர்களுக்கு சொல்லவா வேண்டும்? மான், மீன், ... என எல்லாவற்றையும் உவமையாகவும், உருவகமாகவும் எடுத்துக் கொள்வார்கள், சுதந்திரவாதிகள்! மானின் விழிகள் பெண்ணுக்கு இருந்தால் அழகாகவா இருக்கும்? ம்ம்ம்... பார்ப்பவரைப் பொறுத்தது. காதல் பாடல்களில் ரசித்த பல கற்பனைகளில் சில.
காதலை விட நட்புக்கு பொறுமையும் ஆயுளும் அதிகம் என்பதாலேயோ என்னவோ, காதலைப் பற்றி சொல்லவே இல்லை என்றாலும் கூட, ஒருவர் காதல் வசப்பட்டிருப்பதை அவரது தோழனோ, தோழியோ எளிதில் உணர்ந்துக் கொள்வார்கள். காதலைப் பற்றி பகிர்ந்துக் கொள்வதில் பெண்களுக்குத்தான் அதிக சிரமம் என்று நினைக்கச் செய்கிறது பின்வரும் பாடல் வரிகள்.
கற்றது தமிழ் - இன்னமும் ஒரு நல்ல வெற்றிப் படமாக இருந்திருக்க வேண்டும். பாடல்கள் அனைத்திலும் தமிழார்வத் தொனி இருக்கும். காதலின் ஒவ்வொரு உணர்வுகளையும் எவ்வளவு அழகாக சொல்ல முடியுமோ அவ்வளவு அழகாக சொல்ல வேண்டும் என்ற வேகம் இருக்கும். ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான குரல், ஆனாலும் இந்த மிருதுவானக் கலவை ஆண்களை ஈர்க்கும். பெண்களின் குரலை சங்கீதம் என்பது புதிதல்ல, அதில் தன்னையும் பிணைத்துக் கொண்ட இந்த வரிகள், இதை விட பிடித்தமான வரிகள் பல இருந்த போதிலும், இப்பதிவில்.
காதல் பாடல்களில் பாடப்படும் பொருள் ஒரு சிலதான், வெவ்வேறான வார்த்தைகளில் வரும். வார்த்தைகளின் கோர்வையும், இசையின் கலப்பும் தான் ஒரு நல்ல் பாடலைத் தரும், கூடவே படமாக்கப்பட்ட விதமும் வலிமை சேர்க்கும். "அழகியத் தீயே" யில் வரும் "விழிகளின் அருகினில் வரும் வானம்.." பாடல் ஒரு நல்ல உதாரணம். பிரிவை சொல்லும் சில வரிகள் - பொருளொன்றுதான், வார்தைகள் வேறு. நிரந்தர பிரிவு என்பது மரணம். காதலிப்பவரை சிறிது காலம் பிரிந்து இருப்பதுதான் காதலின் உச்சக்கட்ட வலி. அவ்வலியால் பிறக்கப் போகும் இன்பம் தான் காதலிப்பவர்களின் பேரின்பம். அது கிடைக்க கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
மெட்டுக்கு இசையமைக்க வேண்டிய கட்டாயமற்ற கருப்பு வெள்ளை காலத்து கவிஞரென்பதாலேயோ என்னவோ கண்ணதாசனின் பாடல்களில் பல வார்த்தை அழகோடு கருத்தாழமும் கொண்டதாக இருக்கும். சொற்களோடு, இசையும் காட்சி அமைப்புகளும் பொருந்தி நின்றால் அதனை விட சிறப்பான இன்னுமொன்றை பார்ப்பது அரிதாகி விடும். வில்லனாகவே பார்த்துப் பழகிப் போன நடிகர் அசோகன் தோன்றும் ஒருக் காதல் பாடல், கண்ணதாசனின் வரிகளில்.
Kovil Pillai P.

Comments