ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை) பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை) வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா! காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை) சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை) Kovil Pillai P.
Beyond your imagination