Skip to main content

Posts

Showing posts from August, 2012

உன் கண்ணில் நீர் வழிந்தால்

எப்பொழுதாவது பழைய திரைப்பட பாடல்களை கேட்பதுண்டு, கேட்கும்போதெல்லாம் அதன் சுவைதனில் மூழ்காமல் இருப்பதில்லை, இருக்க முயன்று தோற்ற நாள்களும் உண்டு. பாடலின் இசை, படமாக்கிய விதம், நடிகர்களின் பாவங்கள் மற்றும் அழகிய தமிழ் சொற்களின் கலவை உண்மையாகவே கேட்போரை மெய்மறக்கச் செய்யும். இன்னும் ஒருமுறை இம்மாதிரியான பாடல்கள் தோன்றுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன் (எப்பொழுதுமே நல்ல பாடல்கள் வருகின்றன என்பதை மறுக்கவுமில்லை). உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம்: வியட்நாம் வீடு இசை: கே. வி. மகாதேவன், புகழேந்தி குரல்: டி.எம்.சௌந்தரராஜன் இயற்றியவர்: கவியரசர் கண்னதாசன் "என் தேவையை யாரறிவார்... உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்" - மிகச் சிறந்த பாடல் ஒன்றுக்கான அத்தனை பாங்கும் கொண்ட வரிகள்(ஒலி + ஒளி). திருமண உறவில் நீண்ட பயணம் கொண்ட எவரையும் உணர்ச்சிப்பூர்வமாக்கும் தன்னிகரில்லாத பாடல். உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி பொன்னை மணந்ததினால் உலகில் புகழும் வளர்ந்ததடி பேருக்கு பிள்ளை என்று பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என் தேவையை யாரறிவார் உன்னை போல் தெய்வம் ஒன்றே ...