இந்த பதிவை எழுத நினைத்து சில வரிகளை யோசித்த போதே இது ஒரு நீண்ட பதிவு என உணர முடிந்தது. பொறுமையாக படித்து நேரத்தை வீணடிக்காமல், ஸ்காரால்பாரை இழுக்கின்ற வேகத்திலேயே கண்ணில் தெரிவதை படித்தாலே போதும். காதல் இல்லாத தமிழ் படங்கள் அரிது என்பதால் காதல் பாடல்களுக்கும் பஞ்சமே இல்லை. சமீபத்திய பாடல்களே நூற்றுக் கணக்கில் இருக்கும். ஒரு சில பாடல்களே இங்கு - சிறந்த பாடலென்றோ, எனக்கு பிடித்த பாடலென்றோவெல்லாம் எதுவும் இல்லை. சில விஷயங்களை சொல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுத்துக் கொண்டது, அவ்வளவுதான். நட்பும், காதலும் இதுதான் என்று வரையறுத்து கூற முடியாது, பண்புகளை பட்டியலிட்டு சரி பார்த்துக் கொள்ளக் கூடாதது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. இரண்டுமே கணப் பொழுதிலும் உணர்ந்துக் கொள்ளலாம், காலப் போக்கிலும் அறிந்துக் கொள்ளலாம். ஆனாலும் அடிப்படையில் ஒன்றுதான் - உடல், பொருளையெல்லாம் கடந்து நிற்கின்ற உணர்வுநிலை. எதிர்பாலாருடனான நட்போ, காதலோ தங்களுக்குள் பெரிதான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில்லை. நுழிலையான மெல்லிய வேறுபாடுகள்தான் - தனித்துக் காட்ட அதுவே போதுமானது. அதை உணர முடியாத போதுதான், நட்பா? கா...
Beyond your imagination